வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோழிப்பன்னை ஊழியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய கோரி திடீரென ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் பணிநிரந்தரம் செய்ய கோரி கோஷங்களை எழுப்பினார்கள் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியேற்றினார்கள் இதனால் பரபரப்பு ஏற்பட்டது பல்லாலக்குப்பம் மற்றும் கொத்தமாரிக்குப்பம் பகுதிகளில் சி.பி.எப் என்ற கோழிப்பன்னைகள் செயல்பட்டு வருகிறது இதில் 84 தொழிலாளர்கள் கடந்த 6 ஆண்டுகளாக ரூ.242 தினக்கூலியில் பணியாற்றி வருகின்றனர் இவர்களுக்கு பணிபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் எதுவுமில்லை அத்துடன் இதே நிறுவனத்திற்கு சொந்தமான அகரம்சேரி பொகலூர் ஆகிய இரண்டு கோழிப்பன்னைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு அவர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.340 கூலி வழங்கப்படுகிறது ஆனால் பல்லாலக்குப்பம் கொத்தமாரிக்குப்பம் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் பணி நிரந்தரம் செய்யாமல் அலைகழித்து வருகிறது இதுகுறித்து பல கட்டபோராட்டங்களை நடத்தியும் பிரச்சணைகள் தீரவில்லை நிர்வாகமும் தொழிலாளர்களை மிரட்டுகிறது இதனால் கடந்த ஐந்தாம் தேதி முதல் பல்லாலக்குப்பம் கொத்தமாரிக்குப்பம் கோழிப்பன்னைகளில் பணியாற்றும் 84 தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யவும் தங்களுக்கு வருங்கால வைப்பு நிதி மருத்துவ வசதிகளை செய்துதரக்கோரியும் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர் ஆனால் இதனை பேசி தீர்க்க வேண்டிய அதிகாரிகளும் காவல்துறையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை மிரட்டுகின்றனர் வெளிமாநிலத்திலிருந்து அந்த நிறுவனம் இங்கு ஆட்களை கொண்டு வந்து பணி செய்ய வைக்கின்றனர் எனவே பணி நிரந்தரம் செய்யும் வரை உள்ளிருப்பு போராட்டத்தை காலவரையின்றி நடத்துவது என இந்த கோழிப்பன்னை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர் தமிழக அரசும் தொழிலாளர் நலத்துறையும் இதில் தலையிட்டு இவர்களின் பிரச்சணையை தீர்க்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
DES : Work Struggle to Work in Poultry - Suddenly, employees of Darna besieged Vellore District Collector office