300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய ஆண்டுப்பெருவிழா- வீடியோ

2019-05-16 367

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பசிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்தில் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒரு பகுதி இக்கோவிலில் பக்தர்களின் அருளிக்கமாக வைக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 6ந்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி தினமும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது,இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது, மல்லிகை பூவால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி புனிதம் செய்து அலங்கார தேர்பவனியை தொடங்கி வைத்தார், அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் மரியே வாழ்க என பக்தி கோஷமிட்டு மாதாவை வழிபட்டனர்,அதனைத்தொடர்ந்து வாண வேடிக்கைகளும் நடைபெற்றது, இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது, இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

des : The 300-year-old Pundemada is celebrated annually

Free Traffic Exchange

Videos similaires