நடராஜா நாட்டியாலயாவின் சார்பாக மாணவிகள் அக்ஷிதா மற்றும் தீபிகா சலங்கையணி விழா மற்றும் மாணவிகளின் நாட்டியாஞ்சலி விழா தர்மபுரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் திருமதி மாலா தங்கராஜ், கோவையை சேர்ந்த நடனக்கலைஞர் திரு சிவக்குமார் மற்றும் இசைக்கலைஞர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர். ஈரோடு, சேலம், பவானி, கடத்தூர், தருமபுரி நடராஜா நட்டியாலயாவின் நிர்வாக இயக்குநர் திருமதி.பிரியாபாலாஜி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு நாட்டிய நிகழ்ச்சியில் நடனமாடினர் விழாவின் முடிவில் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்..
Natyanjali Festival of Simranai Festival and Students