முத்துக்கடை பேருந்து நிலையத்தில் சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி- வீடியோ

2019-05-13 1

வேலூர் மாவட்டம் , ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் சாலைப்பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது தனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பில் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை இராணிப்பேட்டை சரக துணைக்கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மற்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.இதில் முத்துக்கடை பேருந்து நிலையம் வழியாக சென்ற ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும்,அணியாமல் செல்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்ததோடு காரில் சென்றவர்களை நிறுத்தி விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

DES Awareness program on Road Safety in Puthukady Bus Stand

Videos similaires