ஸ்ரீபதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

2019-05-09 4

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே இலளிகம் கிராமத்தில் ஸ்ரீபதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளதுத இந்த கோயில் திருவிழா கடந்த 6-ம் தேதி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது இதில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது இதனையொட்டி பம்பை வாத்தியம், வான வேடிக்கை முழங்க ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர் இதை தொடர்ந்து உற்சவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது பின்னர் குழந்தை பாக்கியம் வேண்டியும், மழை வேண்டியும் விவசாய தொழில் செழித்திடவும் அங்காளம்மனுக்கு புடவைகள் படைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவின் ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர்.


Sripati Angala Parameswari Amman Temple Festival

Videos similaires