தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகனை ஆதரித்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திமரப்பெட்டி, பாரதிநகர் உள்ளிட்ட் பகுதிகளில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, உணவுத்துறைஅமைச்சர் காமராஜ், சோவூர்.இராமசந்திரன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்று தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் சுந்தர்ராஜ் பெட்டி வாங்கி துரோகம் செய்துவிட்டு இன்று பெட்டி சின்னத்தில் நிற்கிறார் என்றார். ஆதனால் தான் இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்றார். 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூத்துக்குடி 4வது பைப் லைன் மூலம் குடிதண்ணீர் வழங்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றார். இதனால் காலம் காலமாக இருந்த குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது என்றார். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள் 2கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு என்றார். இப்படி கொடுங்கின்றது அம்மாவின் அரசு, கெடுங்கின்றது திமுக என்றார். தேர்தல் முடிந்தவுடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
des : 5000 Rupa to Vote in Ottapiram in Tutucci Distric, Thulak 3 Thozand Rupase, Mamma Gewes To Thozand Rupes a Dossi.