செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி- எடப்பாடி பழனிசாமி பேச்சு- வீடியோ

2019-05-07 260

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் ரவுண்டு அளவுக்கு திறந்த வேனில் வந்திருந்தார்.அவருக்கு அமைச்சர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர் தங்கமணி உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,இந்தப் பிரச்சார கூட்டம் தேர்தல் முடிந்து வெற்றி விழா கொண்டாடும் கூட்டம் போல் உள்ளது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சரான செந்தில் பாலாஜி இன்று எதிரிகளோடும் துரோகிகளும் இணைந்து இருக்கிறார் அவர் எத்தனை கட்சிக்கு போய்விட்டு தற்போது திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.கடந்த தேர்தலில் கடுமையாக உழைத்து அவரை வெற்றி பெறச் செய்தோம் ஆனால் அதனை மறந்து இருந்த இயக்கத்திற்கு துரோகம் செய்தால் இவர் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார்.செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல அவர் ஒரு அரசியல் வியாபாரி வியாபாரம் எங்கு நடக்கிறதோ அங்கு தான் அவர் கடையை விரித்து இருப்பார்.மறைந்த முதலமைச்சர் கருணாநிதி 2 ஏக்கர் நிலம் தருவதாக பச்சைப் பொய் கூறினார். அதேபோல் தற்போது செந்தில்பாலாஜி 3 சென்ட் நிலம் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை தருகிறார்.தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் தான் உங்களது குறைகள் தீர்க்கப்படும்.கோதாவரி காவிரி திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் 60, 000 கோடி ரூபாயில் தீட்டப்படும் திட்டம் கரூர் பகுதியில் இணையும் வகையில் ஆனால் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.


DES : Senthil Balaji is not a politician but a political businessman. Tamilnadu Chief Minister Edappadi Palanisamy speaks in Aravasa Kuchi assembly election campaign.

Videos similaires