பஞ்சவடியில் 7 அடி உயர பெருமாள் சிலை

2019-05-06 0

புதுச்சேரி– திண்டிவனம் நெடுஞ்சாலை
பஞ்சவடியில் 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக
ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.

இந்த கோயிலில், திருப்பதி திருமலையில் உள்ளது போல்,
வெங்கடாஜலபதியின் மூலவர் சிலை வரும் 10ம் தேதி
பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக சென்னையில் ஸ்ரீஜெய மாருதி சேவா டிரஸ்ட்
நிர்வாகிகள் செய்தியளார்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர்
தாமல் எஸ் ராமகிருஷ்ணன், பிரதிஷ்டை செய்யப்படும்
பெருமாள் சிலையின் உயரம் ஏழரை அடி
என்றும், ஒன்றரை டன் எடை கொண்டது என்றும் கூறினார்.

ஜூன் 23ம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளதாக
தெரிவித்தார்.

Videos similaires