புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வீரடிப்பட்டி கிராமத்தில் கரும்பு வயலில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த இரண்டு கிராமத்தைச் சேர்ந்த 17 குழந்தைகள் உட்பட 39 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாகவும் அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற ரகசிய தகவலை அடுத்து.... புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியின் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாசில்தார் தலைமையில் சம்பந்தப்பட்ட இடத்தில் இன்று ஆய்வு செய்யப்பட்டது அப்பொழுது கரும்புத் தோட்டத்தில் பணிபுரிந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 குழந்தைகள் உட்பட 39 பேர் கொத்தடிமைகளாக பணிபுரிந்தது தெரிய வந்தது பின்னர் அனைவரையும் மீட்டு விசாரணை செய்து தற்போது புதுக்கோட்டை அழைத்துச் செல்லப்படுகின்றனர் மேலும் இது சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது உண்மை எனில் சம்பந்தப்பட்ட நபர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது இதனால் இன்று கந்தர்வகோட்டை பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
DES : 39 people who worked in Puthukottai district were rescued.