ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா. இவர் அண்மையில் பேசிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய் என்றும் பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய் என்றும் நிறம், எடைக்கேற்ப விலை கூடும், குறையும் என அவர் பேசிய விதம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
#Namakkal
#Infant
#Rasipuram