பாலியல் புகார் விசாரித்து முடிக்கப்பட்ட பின்பே அவருக்கு எதிரான சதி விசாரிக்கப்படும்

2019-04-28 1,474

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் வழக்கில் அடுத்தடுத்த திருப்பம் ஏற்பட்டு வருகிறது. 35 வயதாகும் பெண் பாலியல் ஒருவர் ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஜூனியர் பணியாளாக உச்சநீதிமன்றத்தில் இவர் பணியாற்றி வந்தவர். ஆனால் இதை தலைமை நீதிபதி மறுத்து இருந்தார். இதையடுத்து திடீர் திருப்பமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் புகார் அளித்தார். வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த வழக்கு தற்போது தனியாக விசாரிக்கப்படுகிறது.

#RanjanGogoi
#SupremeCourt
#CheifJustice

Videos similaires