உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் போன்று பிரதமர் மோடி பின்தங்கிய சாதியில் பிறந்தவர் அல்ல என்று கூறினார். உயர் சாதியில் பிறந்த மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, அரசியல் ஆதாயத்திற்காக தனது சாதி சான்றிதழில் ஓபிசி என திருத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மோடி முன்பு உயர்சாதி பட்டியலில் தான் இருந்தார் என மாயாவதி திட்டவட்டமாக கூறியுள்ளார். அரசியல் ஆதாயம் மற்றும் பிறபடுத்தப்பட்டோரின் வாக்குகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தான், பிரதமர் மோடி தனது சாதியை மாற்றிக் கொண்டுள்ளதாக கடுமையாக சாடினார் மாயாவதி.
#Mayawati
#PMModi
#Caste