கோமுகி அணை தண்ணீர் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் அணை வரண்டு காட்சியளிக்கிறது- வீடியோ

2019-04-26 1

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலைக்கு அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது. சுமார் 1000 ஏக்கர் நில பரப்பளவுடன் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும். கல்வராயன் மலையில் பெய்யும் மழைநீர் முழுவதும் கல்படை, பொட்டியம், மல்லிகைபாடி, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக அணைக்கு வந்து நிரம்புகிறது. இந்தநிலையில் கோமுகி அணைக்கு வரும் நீர், கைக்கான் வளவு கிராமத்தில் ஓடும் நீரோடையை திசை திருப்பி சேலம் மாவட்டத்தில் உள்ள காரியகோவில் அணைக்கு இணைத்து உள்ளனர். இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் அணை வரண்டு காட்சியளிக்கிறது. இந்நிலையில் அதை மீண்டும் கோமுகி அணைக்கு திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கோமுகி அணையின் காட்சி மேடை பகுதியில் உள்ள அனைத்து சிலைகளும் சேதமடைந்து அலங்கோலமான நிலையில் காட்சியளிக்கிறது. பராமரிப்பின்றி சீரழிந்து வரும் காட்சி மேடை பகுதி சமூகவிரோதிகள் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மீண்டும் சீரமைத்து சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், ஆளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

DES : The dam is full of water from the dam

Free Traffic Exchange

Videos similaires