அப்பா திட்டியதால் மகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை-வீடியோ

2019-04-26 810

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மகள் நிரஞ்சனா. 13-வயதான இவர் அங்குள்ள மேல்நிலைபள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பால்காரரிடம் சில்லறை வாங்க வில்லை என்று நிரஞ்சனாவை மணிகண்டன் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த நிரஞ்சனா தனிமையில் இருக்கும் போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தத்தை உணர்ந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைபற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.

DES : Dad kills her daughter by sucking kerosene in her body

Videos similaires