தஞ்சையில் நெல் கொள்முதல் அதிகாரிகளை கண்டித்து வரும் 29-ம் தேதி தஞ்சை, நாகை.திருவாரூர் மண்டல அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏ.ஐ.டி.யு.சி. நெல் கொள்முதல் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சையில் ஏ.ஐ.டி.யு.சி. நெல் கொள்முதல் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான மூட்டைகளை வெயிலில் வைக்கப்பட்டுள்ளதால் எடை குறைந்து வருகிறது. இதற்கு கொள்முதல் பணியாளர்களே பொறுப்பேற்காதை கண்டித்து வரும் 29-ம் தேதி தஞ்சை, நாகை.திருவாரூர் மண்டல அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், கோரிக்கை ஏற்காவிட்டால் அடுத்த மாதம் 7ந் தேதி சென்னை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நெல் கொள்முதல் பணியாளர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
des : Protest demonstration in Thanjavur, Nagai district, Tirunelveli
#ProtestDemonstration
#Tanjavur