தஞ்சை பேராவூரணி அருகில் உள்ள பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சஹானா. கஜா புயலில் சேதமடைந்த குடிசை வீட்டில் வசித்து வரும் அவர் பிளஸ் 2 தேர்வில் 600க்கு 524 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இது குறித்து ஆசிரியர் ஒருவர் ட்வீட் செய்தார். மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து,நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்,தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா. #ஊக்கமது_கைவிடேல் என்று ஆசிரியர் செல்வம் ட்வீட் செய்து பாராட்டியிருந்தார்.
#Sivakarthikeyan
#DirectorSaravanan
#KajaFlood
#MBBS