தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் கொடைக்காணல் பகுதிகளில் சோத்துப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் கடந்த சில தினங்களாக மழையின்மையால் நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் சோத்துப்பாறை அணைக்கு வரும் நீர்வரத்து 109-கன அடியாக வரத் துவங்கியுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 86.62 அடியாக இருந்த சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9-அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 93.15 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 109-கன அடியாகவும், அணையின் நீர்இருப்பு 3.15 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
des : The water is drained from 3 feet per second for drinking water.