1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா-

2019-04-22 876


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரைத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை திருக்கோயில் சார்பில் சுவாமி-அம்பாள் தங்கப்பல்லக்கிலும், இரவு கட்டளைதாரர்கள் சார்பில் சுவாமி-அம்பாள், பல்வேறு வெள்ளி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது. இதனைதொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

des : 1000 year old Arulmigu Sankaranarayanaswamy Temple Chithirai festival

Videos similaires