களைகட்டும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல்

2019-04-20 6

மே19 நடைபெற உள்ள, திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட வாய்ப்பு கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ளது, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே. போஸ் திடீரென உடல்நலக் குறைவால் இறந்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு வரும், மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் சீட் பெற, அதிமுகவில் கடும் போட்டாபோட்டி நடந்து வருகிறது. ஏனெனில், இது அதிமுக எம்எல்ஏ மறைந்த தொகுதியாகும்.


#ADMK
#LokSabhaElection
#NathamViswanathan
#Thiruparankundram