இந்தியாவில் பயங்கரமான நிகழ்வுகள் நடைபெறும்- வைகோ எச்சரிக்கை- வீடியோ

2019-04-12 370

இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் வந்தால் கற்பனை செய்ய முடியாத பயங்கரமான நிகழ்வுகள் நடைபெறும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அச்சம் தெரிவித்தார். தஞ்சையில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசும்போதுஇ இந்தியா மற்றும் தமிழகத்தின் பன்னாட்டு கம்பெனிகள் படையெடுப்பால் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரால் சிறு வணிகர்கள் சூறையாடப்பட்டு வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி திராவிட இயக்கத்தை மட்டும் இல்லாமல்இ தமிழீனத்தை அழிக்க முயற்சி செய்து வருகிறது என்று தெரிவித்தார். இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

des : Events will be held in India after the terrible fear pamparat

Videos similaires