கிருஷ்ணகிரி அருகே மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்துவந்தவர் ரவி. அவர் தனது மனைவியிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவரது மனைவி காமாட்சி தனது தாய் வீட்டிற்கு சென்று மூன்று மாதங்களுக்கு பிறகு 20-நாட்களுக்கு முன் தனது கணவருடன் வாழ்வதாக கூறி கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு தூங்கி கொண்டியிருந்த காமாட்சியை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு சிங்காரபேட்டை காவல்நிலையத்தில் ரவி; சரணடைந்தார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காமாட்சியின் பிரேதத்தை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து ரவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
des : Saran is the husband of the husband who killed his wife