அதிமுக அரசு கடந்த 8-ஆண்டுகளில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என விழுப்புரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய அவர், இந்தியாவிலும், தமிழகத்திலும் மாற்றம் ஏற்படுவதற்கு இந்த தேர்தல் நல்ல வாய்ப்பு, எனவே மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசில் திமுக பொறுப்பில் இருந்த பொழுதுதான் துரித போக்குவரத்து சாலைகள் போடப்பட்டன என்றும், திமுக ஆட்சியில்தான் விழுப்புரத்தில் அண்ணா பொறியியல் கல்லூரி கலைக்கல்லூரி மருத்துவக்கல்லூரி ஆகியவைகள் கொண்டுவரப்பட்டதையும் நினைவுகூர்ந்தார். மேலும் அதிமுக அரசு கடந்த 8-ஆண்டுகளில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
des : The AIADMK has done nothing for Tamil Nadu in the last 8 years. DMK leader MK Stalin's charge