பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கான போட்டோஷூட் நேற்று சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்தது. ரஜினி போலீஸ் கெட்டப்பில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் கசிந்து சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்தில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருக்கிறார். புகைப்படங்கள் கசிந்ததை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த புகைப்படங்களை தயவு செய்து யாரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய வேண்டாம் என்று ரஜினி ரசிகர்களும், பி.ஆர்.ஓ.வும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
#Rajini
#A.R.Murugadoss
#FirstLookPoster
#Chennai