1991-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தரவேல். ஜெயலலிதா மறைந்த பிறகு தினகரன் அணியில் இணைந்தார். இவர் தற்போது திருப்பத்தூர் நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் சுந்தரவேல் தனது குடும்பத்தினருடன் ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கன்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.