BJP Meeting: H.ராஜாவை தேர்தலில் வெற்றி பெறச் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம்- வீடியோ

2019-04-04 1,234

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவணத்தான் கோட்டையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவணத்தான் கோட்டை பகுதியில் அதிமுக- பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் H.ராஜாவை தேர்தலில் வெற்றி பெறச் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் அறந்தாங்கி(வடக்கு) அதிமுக ஒன்றிய செயலாளர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் அதிமுக, பாஜக,தேமுதிக, பமாக,தமிழ்மாநில காங்கிரஸ்,புதிய தமிழகம் கட்சிகளின் ஒன்றிய,ஊராட்சி கிளைகழக செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். H.ராஜாவின் வெற்றிக்கு எந்த வகையில் தேர்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும். பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் என்ன என்பதை வாக்காளர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்பது போன்ற ஆலோசணைகள் வழங்கபட்டது.

BJP Meeting in Pudukottai.

#BJP

Videos similaires