கேரளத்தின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோற்கடிக்கப்படுவது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மதுரையில் தெரிவித்தார். மதுரையில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் போன்றவை அவை இரண்டும் அரசியல் களத்துக்குத் தேவை என்ற நோக்கத்தில் பாஜக செயலாற்றி வருகிறது என்று தெரிவித்தார். எங்கிருந்தோ இறக்குமதியானதைப் போல பாஜக குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்கள் கருத்துக் கூறி வருவது ஏற்புடையதல்ல என்று அவர் தெரிவித்தார். மேலும், கேரளத்தின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோற்கடிக்கப்படுவது உறுதி என்று தெரிவித்த அவர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது ஊழல்கள் மூலமாக நாட்டைக் கொள்ளையடித்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர பாஜக அரசு தீவிரமாகப் பணியாற்றியது என்றும் அவர் தெரிவித்தார்.
Rahul's defeat in Wayanad constituency