பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் தபாங் 3

2019-04-01 1

தபாங், தபாங் 2 படங்கள் ஹிட்டானதை அடுத்து அதன் 3ம் பாகத்தை எடுக்கிறார்கள். சல்மான் ஹீரோவாக நடிக்கும் தபாங் 3 படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இந்த படத்தை சல்மானின் தம்பி அர்பாஸ் கான் தயாரிக்கிறார். படப்பிடிப்பு இன்று இந்தூரில் துவங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை சல்மான் கான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதே புகைப்படத்தை பிரபுதேவாவும் வெளியிட்டுள்ளார். 10 ஆண்டுகள் கழித்து பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடிக்கிறார். முன்னதாக 2009ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான வாண்டட் படத்தில் சல்மான் நடித்திருந்தார்.

#SalmanKhan
#SonakshiSinha
#Prabhudeva
#Dabang3