பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியவரை விசாரிக்க உத்தரவு- வீடியோ

2019-03-30 423

பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் மணிவண்ணனை 4 நாட்கள் சிபிசி ஐ டி காவலில் விசாரிக்க நீதிபதி நாகராஜ் உத்தரவு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கடந்த 24 ஆம் தேதி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து குற்றவாளிகள் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளின் நண்பர்கள் கடந்த மாதம் 26 ஆம் தேதி புகாரளித்த சகோதரரை தாக்கியுள்ளனர்.

இதனை யடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் கடந்த மாதம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செந்தில், பாபு, வசந்தகுமார், ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் பார் நாகராஜ் முன் ஜாமீன் பெற்றார். மணி என்கிற மணிவண்ணன் தலைமறைவானார். இதனையடுத்து தலைமறைவான மணிவண்ணனை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு சரணடைந்தார். இதனையடுத்து அவரை வரும் 8 ஆம் தேதொ வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்திரவுட்டார். நேற்று முன் தினம் பிணை வேண்டி விண்னப்பித்துள்ளார். பிணை வழங்க நீதிபதி மறுத்ததை தொடர்ந்து சிபி சி ஐ டி மணிவண்ணனை 10 நாட்கள் விசாரிக்க அனுமதி வேண்டி விண்ணப்பித்தனர். இதனையடுத்து நீதிமன்ற காவலில் இருந்த மணிவண்ணனை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் நான்கு நாட்கள் சிபிசி ஐ டி காவலில் விசாரிக்க அனுமதியளித்தார். இதனையடுத்து மணிவண்ணனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடல் பரிசோதனை செய்யப்பட்டு விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்றனர். திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் நீதிபதி நாகராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளனர்.

kovai news

Videos similaires