கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது-வீடியோ

2019-03-30 1

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அரியாங்குப்பம் போலீசார் அருந்ததி நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது சந்தேகப்படும் வந்த 3இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர் மேலும் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது இதனையடுத்து அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Pondicherry news.

Videos similaires