வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் காசநோய் தடுப்பு பிரிவின் சார்பில் காசநோய் குறித்து துப்புரவு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதனை காசநோய் தடுப்பு பிரிவின் இயக்குநர் மருத்துவர் யாஸ்மீன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இதில் காசநோய் தடுப்பு குறித்து உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர் தொழிலாளர்களுக்கு காசநோயின் அறிகுறிகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பாதுகாப்பு கவசங்களுடன் பணி செய்து காசநோயை தடுக்கும் வழிமுறைகள் தொடர் சிகிச்சைகளால் குணமாக்குவது குறித்தும் விளக்கி கூறப்பட்டது பின்னர் காசநோய்க்கான இலவச பரிசோதனைகள் செய்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்பட்டது இதில் 200-துப்புரவு தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்
DES : Awareness for cleaning workers on tuberculosis on behalf of the Tuberculosis Prevention Section