சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தலில் பாஜக சார்ப்பில் போட்டியிடும் எச் ராஜா தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் தாக்கல் செய்தார்
இந்த நிலையில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள ஹெச்.ராஜா வேட்புமனுத்தாக்கல் செய்த போது, குறிப்பிட்ட அளவை விட அதிகமான வாகனங்களுடனும், நிர்வாகிகளுடனும் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, வி.ஏ.ஓ காஞ்சிரங்கால், சிவகங்கை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
des : The case was filed against H. Raja ,The case is a violation of election rules