பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து புதுக்கோட்டையில் திமுக சார்பாக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக , காங்கிரஸ் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் உட்பட திமுக கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய அளவில் தேர்தல் பணிகள் செய்வது, வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் நடத்துவது ,மத்திய மாநில அரசுக்கு எதிராக செயல்படும் இந்த அரசுகளின் அவல நிலைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
des : Consultative meeting of DMK alliance parties to advise on parliamentary elections.