பாலியல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்

2019-03-16 654

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து கலந்து கொண்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களை அரசு நியாயமாக விசாரிக்க வேண்டும். அதேபோல, இந்த விசாரணையில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் பாரபட்சம் இன்றி குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்
Students of State Arts College Students are urged to be severely punished by the culprits involved in the sex case

Videos similaires