காஞ்சிபுரம் மாவட்டம் குரோம்பேட்டை புதுவாழ்வு ஜெம்ஸ் கிறிஸ்துவ ஆலயத்தின் போதகர் ஐசக் டேனியல் என்பவர் உலக கின்னஸ் சாதனை புரியும் விதமாக பைபிள் வாசகங்கள் அடங்கிய இரண்டு கிலோ மீட்டர் நீலத்திற்க்கு ஐந்து மொழிகளில் 31,104 வசனங்கள் பதிக்கப்பட்ட புத்தகத்தை தயாரித்தார். இதுமட்டுமின்றி சிறிய அளவிலான 2.2 அங்குலம் கொண்ட பைபிள் புத்தகத்தையும் 2500 பக்கங்களை கொண்ட 40000 இந்து,கறிஸ்துவ,முஸ்லீமை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் ,சினிமா பிரபலங்கள்,மற்றும் பொதுமக்கள் தங்களது கைகளால் எழுதபட்ட வாசகங்களை கொண்ட பைபிள் புத்தகத்தகமும் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை கவுரவிக்கும் விதமாக யூனிவர்சல் அச்சீவ்மெண்ட புக் ஆப் ரெகார்ட்ஸ் மற்றும் ஐ பூயச்சர் கலாம் புக் ஆப் ரெகார்ட்ஸ் சார்பில் அதன் நிறுவன தலைவர் பாபு பாலகிருஷ்ணன் ,தலைமை நிர்வாக அதிகாரி உமா , பேராயர் தயானந்தன் ஆகியோர் ஐசக் டேனியலுக்கு சாதனைக்கான பதக்கத்தையும் ,கேடகங்களையும் வழங்கினர். மேலும் இவை உலக கின்னஸ் சாதனை புத்தகத்திற்காக பரிந்துரை செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Government
#Guiness
#Kanchipuram