கோடை காலம் தொடங்கும் முன்னரே சேலத்தில் சுட்டெரிக்கும் வெயில்....

2019-03-11 545

வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி மற்றும் சோலார் கண்ணாடிகளை மாநகர காவல் ஆணையர் சங்கர் வழங்கினார். கோடை காலம் தொடங்கும் முன்னரே தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் தற்போது கடுமையாக உள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சேலத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி, சோலார் கண்ணாடி மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கர், துணை ஆணையாளர்கள் தங்கதுரை மற்றும் சியாமளா தேவி ஆகியோர் கலந்துகொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள சோலார் தொப்பி மற்றும் சோலார் கண்ணாடிகளை வழங்கினர். தொடர்ந்து போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர்களை வழங்கிய மாநகர காவல் ஆணையர் சங்கர் பேசும்போது, ஆண்டுதோறும் கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள போக்குவரத்து காவலர்களுக்கு மாநகர காவல்துறை சார்பில் நீர்மோர் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளதாகவும் தொடர்ந்து 3 மாதங்களுக்கு சேலம் மாநகர பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் பணியாற்றும் இடத்துக்கே நேரடியாக நீர் மோர் வினியோகம் செய்ய மாநகர காவல் துறை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்
Sunny sunbathing before the summer season begins

#Sunbathing
#Summer
#Season

Videos similaires