பள்ளி மாணவிகள் காகிதப்பை தயாரித்து உலக சாதனை முயற்சி

2019-03-07 661

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சேக் பாத்திமா பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியில் மாணவிகள் காகிதப் பை தயாரித்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோவில்வயல் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் 6 ஆயிரம் காகிதப் பை தயாரித்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த காகித பைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து அதில் வரும் தொகையை புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குனர், தாளாளர், முதல்வர், பள்ளி ஆசிரியர்கள் உட்பட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
School students prepare paper and try the world record

#School
#Pudhukottai
#Students
#WorldRecord

Videos similaires