ஏரியில் ஆட்டோ கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

2019-03-06 745

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே களமருதூரில் இருந்து உளுந்தூர்பேட்டை நகருக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ. ஓட்டுனர் அதிவேகமாக ஓட்டியதால் நிலைதடுமாறி களமருதூரில் உள்ள ஏரிக்கரையில் கவிழ்ந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த 13 பேரில் 10 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த பயணிகளை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பகுதியில் இதுபோன்று விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Auto collapsed in the lake and injured more than 10 people

#Auto
#Hospital
#Vizhuppuram

Videos similaires