அரசுப் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா- வீடியோ

2019-03-05 277

அவசியப் பொருட்களை சீதனமாக தந்த மக்கள்

தஞ்சையில் உள்ள கூடலூர் ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், ஊர் பொது மக்கள் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையிலான உலக வரைப்படம், இந்திய வரைப்படம், அம்பேத்கர், காந்தி, காமராஜர் ஆகியோரின் புகைப்படங்கள், ஸ்மார்ட் வகுப்புக்கு பயன்படுத்த டிவி, குடிநீர் பாத்திரங்கள் என பள்ளிக்கு தேவையான பொருட்களை மங்கள வாத்யங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு பொதுமக்கள் எடுத்து வந்தனர். சீர் வரிசை எடுத்து வந்த கிராம மக்களை பள்ளி ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கோலாட்ட கலை நிகழ்ச்சி நடந்தது.

Village people given need things to school.

Free Traffic Exchange

Videos similaires