திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சி,எஸ்,ஜ , அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவ மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் வளர் இளம் வயதினர் திட்டத்தின் கீழ் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை வாரந்தோறும் வியாழக்கிழமை வழங்கப்பட்டு வந்தது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிற்பகல் சத்து மாத்திரைசாப்பிட்டனர். இதை அடுத்து சிறிதுநேரத்திலேயே தமிழ்செல்வன், ஜெகன், ஜீவானந்தம், எஸ்கியோல், ஆகிய நான்கு 4 மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கிக்கீழே விழுந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் அருகில் உள்ள தாராபுரம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுக்குறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்,பதறியடித்துக் கொண்டு பள்ளி முன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 students drank nutty tablets