மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியர்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மர் லோடு-மேன் வேலை செய்துவருகிறார். இவருக்கு மனைவி சங்கரேஸ்வரி மகள் சுந்திரி மகன் முருகசெல்வம் உள்ளனர்
இந்நிலையில் திருப்புவனம் அருகே புல்வாய்க்கரை கிராமத்தில் உள்ள தர்மரின் மாமனார் வீட்டிற்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தனது குடும்பத்துடன் சென்றார். வளையங்குளம் வழியாக சோளங்குருணி சாலையில் சென்று கொண்டிருக்கும்போது சார் புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்லன் என்பவரின் மகன் ராமன்இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளார். அப்போது ராமன் தனது இருசக்கர வாகனத்தின் முன்னால் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி முந்திச் செல்ல முயன்றபோது எதிரில் வந்த தர்மர் வாகனத்தில் மோதினார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழந்ததில் தர்மர்இ சுந்தரிஇ முருகசெல்வம் ஆகிய மூன்று பேரும் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சங்கரேஸ்வரியை இருசக்கர வாகனத்தில் வந்த ராமர் அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். மேலும்இ உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து தகவலறிந்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
DES : 3 people including children have been hurt by the state bus racket