கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 544 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 89 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கரூர் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி வைத்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது தமிழகத்தில் முதன்முறையாக மல்டி மீடியா வகுப்புகள் கரூரில் தான் துவங்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்குள் பயன்படுத்தும் பேட்டரி வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
DES : For the first time multimedia classes were started in Karur.