சேலத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி- மாவட்ட ஆட்சியர் ரோகிணி பேட்டி- வீடியோ

2019-03-01 731

சேலத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அணைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோகிணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு "சேலம் வோட்ஸ்" என்ற எழுத்து வடிவில் அணிவகுத்து நின்றனர். தொடர்ந்து 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர் "சேலம் வோட்ஸ்" என்ற புதிய லோகோவையும், தேர்தல் விழிப்புணர்வு விளம்பர நோட்டீஸ்களையும் வெளியிட்டார். பின்னர் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கல்லூரி மாணவிகளுடன் குழுவாக செல்பி எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து மாணவிகள் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் கல்லூரி மாணவிகள் அனைவரும் தங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவ - மாணவிகள் அனைவரையும் வாக்களிக்க வைக்கும் கல்லூரிகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் கௌரவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

DES : Interview with the Chief Secretariat of Salem Motion by Rohini

Videos similaires