அதிமுக கூட்டணில பாமக சேந்துருச்சு.
ரொம்ப ஷாக்கா இருக்கே.. அப்டீனு சிலர் சொல்றாங்க.
ஆக்சுவலா அவங்கள பாத்தாதான் நமக்கு ஷாக்கா இருக்கு.
பாமக நிறுவனர் ராமதாச பொருத்தவரைக்கும்
அவர் சொல்றது ஒண்ணும் செய்றது வேறயுமாதான் இருக்கும்.
கட்சி தொடங்கினதுல இருந்தே அப்டிதான்.
அத கவனிச்சுகிட்டே வந்தவங்களுக்கு
இந்த கூட்டணி மேட்டர் அதிர்ச்சியாலாம் இருக்காது.
பிடிச்ச கட்சி கூட்டணி மாறினா
அத சாணக்யத்தனம், ராஜந்தந்திரம்னு பாராட்றதும்
பிடிக்காத கட்சி இடத்த மாத்தினா
சந்தர்ப்பவாதம், வெட்கக்கேடுனு திட்றதும்
நமக்கு சகஜம்தான.