பழனியில் காதல் விவகாரம் ஒன்றில் இளைஞர் ஒருவர் காவல் நிலையத்திற்க்கு தொடர்ந்து அழைக்கப்பட்டு துண்புறுத்தப்பட்டதால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
பழனியருகே உள்ளது மஞ்சநாயக்கன்பட்டி. இந்த ஊரை சேர்ந்த தன்னாட்சி மகன் மணிகண்டன்என்பவர் அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது மகள் ப்ரீதாவுடன் கடந்த மாதம் 27ம்தேதிஊரைவிட்டு ஓடிவிட்டதாக தெரிகிறது. 15வயதே ஆன ப்ரீதாவை காணவில்லை என்று பழனிஅனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்வீட்டார் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்அடிப்படையில் மணிகண்டனின் குடும்பத்தினரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.மணிகண்டனின் அண்ணன் சசிக்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் திருப்பூரில் தங்கிகட்டிட வேலை பார்த்து வருகிறார். அவரையும் பழனிக்கு அழைத்துவந்து மகளிர் காவல்நிலையத்தில்வைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சசிக்குமார் திடீரென விஷமருந்தியநிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர்தெரிவித்ததாவது:- தனது தம்பி மணிகண்டன் எங்கு இருக்கிறான் என்று கேட்டு காவல்துறையினர்தன்னை தொந்தரவு செய்ததாகவும், அவன் எங்கு இருக்கிறான் என்று தனக்கு தெரியாது என்றும்அவன் இருக்கும் இடம் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்கிறேன்என்று பலமுறை சொல்லியும் காவல்துறையினர் என்னை தினமும் காவல்நிலையத்திற்கு அழைத்துவிசிரிக்கின்றனர். கடந்த 15நாட்களாக வேலைக்கு செல்லமுடியாமல் பழனியிலேயேதங்கியுள்ளதாகவும், இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுவதாகவும்தெரிவித்தார். அன்றாடம்வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வரும் தன்னை போலீசார்காவல்நிலையத்தில் வைத்து தரக்குறைவாக பேசியும், தாக்கியும் வந்ததால் தான் விஷமருந்தியதாகதெரிவித்தார். காவல்துறையினரின் விசாரணையில் மனமுடைந்த இளைஞர் ஒருவர் விஷமருந்நியசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.