மெட்ரோ உருவான கதை

2019-02-14 1

25,000 தொழிலாளர்களுடன்
10 ஆண்டுகளாக நடந்த
மெட்ரோ ரயில் பணி முடிந்துள்ளது.

தமிழக தலைநகரின் மற்றொரு
அடையாளமாக உருவாகி இருக்கிறது
சென்னை மெட்ரோ ரயில்.

ஏர்போர்ட்க்கு இணையாக காட்சியளிக்கிறது
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம்.

கூவம் நதிக்கு கீழேயா நாம் செல்கிறோம்
என்று அச்சம் கலந்த ஆர்வத்தை
மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது சென்னை மெட்ரோ.

இன்று பளபளப்பாகவும் சொகுசாகவும்
நிமிர்ந்து நிற்கும் சென்னை மெட்ரோ
உருவானது சுகமான பயணம் அல்ல
என்கிறார்கள் அந்த பணியில் தம்மை
பத்தாண்டுகளாக அர்ப்பணித்துக் கொண்ட
பொறியாளர்களும் தொழிலாளர்களும்.

அரசு, பொதுத்துறை அலுவலர்கள்
ஊடகங்களுடன் உரையாட
கட்டுப்பாடுகள் நிலவும் சூழ்நிலையில்
தயக்கம் இல்லாமல் மனம் திறக்கிறார்
சென்னை மெட்ரோவின் முன்னாள்
திட்ட இயக்குநரும், இப்போது
நாக்பூர் மெட்ரோவின் தலைமை ஆலோசகருமான
ஆர். ராமநாதன்.

Videos similaires