வழக்கறிஞர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும், இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூபாய் 10ஆயிரம் வழங்க வேண்டும், மத்திய பட்ஜெட்டில் வழக்கறிஞர்களுக்கு வழக்களிகள் நலனுக்காக ரூபாய் 500கோடி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி புதுச்சேரியில் உள்ள 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்களின் 5அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி இன்று புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் அனைவருக்கும் சேம்பர், தரமான நூலகம், சுகாதாரமான கழிப்பிட வசதி, இணையதள நூலக வசதி செய்து தர வேண்டும்,
வழக்கறிஞர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும், இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூபாய் 10ஆயிரம் வழங்க வேண்டும், மத்திய பட்ஜெட்டில் வழக்கறிஞர்களுக்கு வழக்களிகள் நலனுக்காக ரூபாய் 500கோடி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Lawyers protest in pondycherry.