நாடு மாறி வந்த சிறுத்தை குட்டி கொஞ்சம் கொஞ்சமாக புது இடத்துக்கு ஏத்த மாதிரி மாறி வருகிறது.சென்னை ஏர்போர்ட்டில், கடந்த 2-ம் தேதி நள்ளிரவு, தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் பலர் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் கையில் ஒரு மூங்கில் கூடையை பிடித்து கொண்டு நடந்தார். ஆனாலும் அந்த கூடை இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டே இருந்ததை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து விட்டார்கள்.