ஒருவர் கூட தமிழர் இல்லை.. வேல்முருகன் குற்றச்சாட்டு- வீடியோ

2019-02-06 697

2011 முதல் 2017 வரை 60000 பதவிகள் நியமனம் செய்யப்பட்டதில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது அதிர்ச்சிஅளிக்கிறது. இது தமிழக மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் செயல் என வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்



சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்களின் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தமிழ்நாட்டில்உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலக பணிகளிலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர். 2011முதல் 2017 வரை 60000 பதவிகள் நியமனம் செய்யப்பட்டதில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது அதிர்ச்சிஅளிக்கிறது. இது தமிழக மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் செயல்..

2006 வரை மத்திய அரசு காலி பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாநிலத்திற்குட்பட்ட நபர்கள் மட்டுமே தேர்வு எழுதஅனுமதித்தனர்.

ஆனால் தற்போது மத்திய அரசு பணியாளர்களுக்கான தேர்வு தேசிய மயமாக்கப்பட்டதால் தமிழர்களுக்கு வாய்ப்புமறுக்கப்படுகிறது.

Vellumurugan allegation.

Videos similaires