கிழக்கு கடற்கரை இணைப்பு சாலையில் கால் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்- வீடியோ

2019-02-06 336

சென்னை சோழிங்கல்லூர் அடுத்த கிழக்கு கடற்கரை இணைப்பு சாலையில் வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டம்



கடந்த 28ம் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை போக்குவரத்து போலீசார் தரைகுறைவாகவும், இழிவாகவும் பேசியதால் மனவுளைச்சலில் மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.



தற்கொலைக்கு முன்னதாக தன்னுடைய செல்போனில் தன்னுடைய தற்கொலைக்கு காரணமானர்களை பற்றியும் தற்கொலைக்கான காரணத்தையும் பதிவு செய்திருந்தார்.



ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான போக்குவரத்து போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த கிழக்கு கடற்கரை இணைப்பு சாலையில் சுமார் 60க்கும் மேற்பட்ட வாகனகளை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி போராட்டத்திற்க்கும் ஒத்துழைப்பு தரும் படியும் கார் ஒட்டுநர்ககளுக்கு ஆதரவு அளிக்கும் படியும் கோரிக்கை வைத்தனர்.ரஇதன் அடிப்படையில் கார் ஓட்டுநர்கள் போராட்டகாரர்களுடன் இணைந்து கார் ஓட்டுநர்களுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல் துறையினருக்கு போதிய கோட்படுகள் அமைக்க வேண்டும்என்ற பல்வேறு கோஷங்கள் இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



DES : Driving on the next East Coast Road connecting Chennai Cholingallur was stopped by drivers

Videos similaires