கரூரில்,விவசாய கடனை ரத்து செய்ய வலியுருத்தியும்,விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வலியுருத்தியும் காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியினர் ஊர்வலம்நடத்தி மஹாத்மாகாந்தி சிலையிடம் மனு அளித்து நூதன போராட்டம்.
கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியின் சார்பில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வலியுருத்தி மாவட்ட விவசாய அணியின் மாவட்டதலைவர்ஜெயபிரகாஷ் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.இந்த ஊர்வலம் கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள காமராஜ் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு லைட் ஹவுஸ் கார்னரில்உள்ள மஹாத்மா காந்தி சிலை வரை ஊர்வலமாக சென்று இறுதியில் மஹாத்மா காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி தூய்மைபடுத்தி பால் அபிசேகம் செய்தும்,மலர்மாலைஅணிவித்து காந்தி சிலையிடம் தங்களது கோரிக்கைகளை வலியுருத்தி மனு அளித்தனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினர் சுப்ரமணி கூறும்போது,மத்திய பிரதேசம்,சட்டீஸ்கர்,ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 48-மணி நேரத்தில்விவசாய கடன்களை ரத்து செய்ததோ அது போல் வரும்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று இந்திய அளவிலும்,தமிழகத்திலும் விவசாய கடன்களை ரத்து செய்யும் காங்கிரஸ் அரசு. என்றார்.
Des : Mahatma Gandhi's caste petition
#MahatmaGandhi
#caste
#petition
#Karur